பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧΧV அணிந்துரை நல்கிய அன்பருக்கு என் நன்றி என்றும் உரியது. டாக்டர் .ே கோபாலகிருஷ்ண நாயுடு அவர்களை அறிஞருலகம், மருத்துவருலகம், பக்தர் லெகம் நன்கு அறியும். பாமரரும் நன்கு அறிவர் மக்கள் நலவாழ்வுத் துறையில் தம் வாழ்க்கையைத் தொடங்கிய இப்பெரு மகனார் பணியே பரமன் வழிபாடு என்ற கொள்கைப் பிடிப்புடையவராக இருத்தமையால் தாம் பணியாற்றிய இடங்களிலெல்லாம் தம்முடைய பணி முத்திரையைப் பதித்து வந்தவர். ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தில் தாம் பணியாற்றிய இடங்களிலெல்லாம் தம்முடைய கடுமையான உழைப்பால் மக்கள் நலவாழ்வுக்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கிப் பொதுமக்களும் அரசும், ஒரு முகமாகப் போற்றும் பெருமையுடையவராகத் திகழ்ந்தவர். கருவிலே ஆ ன் மி க நாட்டமுடைய இப்பெரியார், திருவரங்கம், சிதம்பரம், திருமலை போன்ற திருத்தலங் களில் பணியாற்றும் வாய்ப்புகள் ஏற்பட்டபோது திருத் தலப் பயணிகள் அதிகமாகக் கூடும் திருத்தல நகரங்களைத் துரய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு இவரைச் சார்ந்து விட்டது. இப்படிச் சொல்வதைவிட திருவரங்கத்துப் பெரிய பெருமாளும், தில்லைக் கோவிந்தராசனும் (ஏன்? நடராசப் பெருமானும் கூடத்தான்!) திருமலை சீநிவாசனும் தாம் கோயில் கொண்ட இடங்களில் இவர்தம் சேவையைப் பெற வேண்டும் என்று கருதியே இவரைச் சில ஆண்டுகள் தாம் இருக்கும் இடங்கட்கு வரவழைத்துக் கொண்டார்கள் என்று கருதுவது பொருத்தமல்லவா? குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்தானே சிறப்புப் பெறும்? இவரை ஆட்கொண்டு தமது சிறந்த அடியார் களில் ஒருவராக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்று கருதியே இவருக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்கச் செய்தனர் என்றே எனக்குத் தோன்றுகின்றது. இது மட்டுமா? தொழிலாளர் களே நாட்டுச் செல்வத்தைப் பெருக்குபவர்கள் என்ற உண்மையை அறிந்து தொழிற்பேட்டைகள், தொழிற் சாலைகள் நிறைந்த கோவைக்கும் இவர்தம் திருப்பணி கிடைக்கச் செய்தான் காக்கும் கடவுளாகிய அந்த நாராயணன். இதனால் கோவையும் இவர்தம் அயரா உழைப்பால் நல்ல சூழ்நிலையைப் பெறும் வாய்ப்புப் பெற்றது. அதிக காலம் பணியாற்றிய அந்நகரிலேயே