xxxvii
அறிவியலைப் பயின்று மருவத்துறையில் தேர்ச்சி பெற்று மக்கள் நலவாழ்வுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் நாயுடு அவர்கள் தமது இறுதிக் காலத்தைத் திருப்பதியில் தம் அருமை மகன் தாவர இயல்துறைப் பேரா சிரியர் திரு கோ. லீலாகிருஷ்ணனுடன் கழித்து வருகின்றார். திருப்பதியில் இவர்கள் த்ங்கும் பகுதி வைகுண்டபுரம்" என்ற குடியிருப்பு. பிறவியை அறுத்து வைகுண்டவாசம் இப்பெருமகனாருக்கு உறுதி என்பது இது சூசகமாக அமைந்து விட்டது என்பது அடியேனின் கணிப்பு. நான் திருப்பதிக்கு 1960-ஆகஸ்டில் பணியாற்றத் தொடங்கிய நாள் தொட்டு இவர்தம் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. "நவில்தொறும் நூல்நயம் போலும் பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பு என்ற வள்ளுவரின் வாய் மொழிக்கு இவர் இலக்கியமாய்த் திகழ்வதை இவரிடம் கண்டு மகிழ்கின்றேன். கருக்கமாகக் கூறினால், அறிவியல் அறிஞர், எழுத்தாளர், உரையாடல் கலைஞர், உயர்ந்த பண்பாளர், மனிதாபிமான மிக்கவர் - இவர்கள் யாவரும் உருண்டு திரண்டவர்தாம் டாக்டர் G.T. கோபாலகிருஷ்ண நாயுடு என்பார் என்று கூறலாம். இவர்தம் செளலப்பிய செளசீல் ய குணங்கட்கும் இவர் அடைந்த பெரும் புகழுக்கும் அறிகுறியாகத்தான் இவர் இந்திய மருத்துவக் கழகத்தின் (சென்னை) தலைவராகவும், இத்திய மருத்துவ மத்திய கழகத்தின் (புது டில்லி) துணைத்தலைவராகவும் தேர்ந் தெடுக்கப் பெற்றார் என்று கருதலாம். இவற்றுள் பின்னது கிடைத்தற்கரிய பேறு. இப்பொறுப்புகளில் இவர் பணியாற் றியபோது தமிழக ரீதியிலும் அணைந்திந்திய ரீதியிலும் புகழ் மாலைகள் வந்து குவிந்தன. இவையெல்லாம் ஏழு மலை யானின் கருணையால் ஏற்பட்ட விளைவு என்பது என் கருத்து. பண்புடையார் பட்டுண்டு உலகம்" என்ற பொய்யாமொழிக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர். கடந்த 27 ஆண்டுகளாகப் பழகிச் சத்துவக் குணம் நிறைந்த இப்பெரியாரின் உயர் பண்புகளால் கவரப் பெற்றேன்; முதலாழ்வார்களிடம் காணப்படுவது போன்ற இவர்தம் அமைதியான போக்கு, சாந்தமும் புன்முறுவலும் தவழும் திருமுக மண்டலம், அதிர்ந்து பேசாத பண்பு இவை கண்டாரை ஈர்க்கும் தன்மையுடையவை. பக்தியின் சிகரமாகக் காணப்படுபவர். சீவன் முக்தர் நிலையிலிருப் உவர். இத்தகைய பெரியார் பால் அடியேன் கொண்டுள்ள பெருமைக்கும், மரியாதைக்கும் அறிகுறியாக
பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/41
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
