பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- o 6. - 涤 1. ஞானப் பூங்கொடி தமிழ்ச் சங்கச் சான்றோர்களே, ஊர்ப் பெருமக்களே! வணக்கம். தமிழ்கூறு நல்லுலகத்தில் ஒரு சிறந்த ஊராகத் திகழும் பாக்காலா தமிழகத்தையும் ஆந்திரத் தையும் இணைக்கும் ஓர் இருப்பூர்திச் சந்திப்பு நிலைய மாகத் திகழ்கின்றறு. இந்தத் தமிழ்ச் சங்கம் பல தமிழ் நிகழ்ச்சிகட்கு ஏற்பாடுசெய்து பிழைப்பின் நிமித்தம் தமிழகத்திலிருந்து இங்கு க் குடியேறியுள்ள தமிழ் மக்களுக்குத் தமிழ் விருந்து அளித்து வருவதைக் கண்டு மகிழ்கின்றேன். இதற்கு அரும்பாடுபட்டுச் சங்கத்தை நிறுவுவதற்கு ஒத்துழைத்த திரு. ஜி. கோபாலகிருட்டிணன் (ஆசிரியர்), திரு. சகதீசன் (இரயில்வ்ே அலுவலர்) போன்ற உண்மைத் தொண்டர்களின் பணி தமிழர் வரலாற்றில் தக்க இடம் பெறும் என்பது அடியேனின் கணிப்பு. இன்று உங்கட்கு முன் ஞானப் பூங்கொடி என்ற தலைப்பில் பேச முன் வந்துள்ளேன். இந்த ஞானப் பூங்கொடி யார்?. இவர்தாம் பெரியாழ்வார் வளர்த்த பெண் கொடி மானிடவர்க்கென்று பேச்சுப் படில்

  • 25.1.67இல் பாக்காலா தமிழ்ச் சங்கத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு. திருவேங்கடவன் பல்கலைக்கழ்க விரிவுச் சொற்பொழிவுத் திட்டத்தின்கீழ் அமைந்தது.