ஞானப் பூங்கொடி 7 (கொண்டல்-மேகம்; வரை.மலை; கூர் இருள்.செறிந்த இருள்; அறா.விட்டு நீங்காத; கார்.கறுத்த; பூவை.பூவைப் பூ; காயா.காயாம் பூ: நீலம்-கரு நெய்தல்; காவிமலர்.செங்கழு நீர்ப்பூ, ஆவி-உயிர்; பூரிக்கும்.பருத்து வளர்கிறது.) என்ற நம்மாழ்வாரின் அநுபவம் இவளுக்கு ஏற்பட்டது. இந்தத் தெய்விக அழகை அவளுடைய கண்கள் ஆர்வத் தோடு பருகின. அந்த அழகு அவள் உள்ளத்தில் பாய்ந்து உயிரோடு கலந்து விட்டது. ஒருநாள் இந்த ஞானப் பூங்கொடி நந்தவனத்திற்குப் போனபோது ஒரு மரத்தைச் சுற்றிப் படர்ந்திருந்த பூங்கொடியொன்று அவள் கண்ணில் பட்டது. தனக்கும் ஒரு கொள்கொம்பைப் படரவேண்டிய வயது வந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டாள். ஆனால், இவளுடைய காதலனை எங்கே, எப்பொழுது காண்பது? கோதை விம்மினாள்; வாய் வெருவினாள்; பெருமூச்சு விட்டாள். தன் நெஞ்சை அருமைத் தந்தைக்கும் தெரியாமல் ஒளித்து வைத்துக் கொள்ள முயன்றாள். சிறு வயதில் கண்ணனின் நாமங்களைச் சொன்னதிலும், அவன் திவ்வியாயுதங்களை வரைந்து பார்த்ததிலும், தன் உள்ளத்தில் கண்ணன் உருவைச் சித்திரித்துப் பார்த்த திலும்-பூரித்து மகிழ்ந்திருந்த ஆழ்வாருக்கு யுவதியான பிறகு அவள் மேற்கொண்ட செயல் அவருக்குக் கவலை யைத் தரத் தொடங்கியது. யுவதியாக வளர்ந்த பிறகு கோதையின் காதல் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வளரத் தொடங்கியது. நாளடைவில் காதல் இவளை முற்றும் விழுங்கிவிட்டது. தான் படர்வதற்கு வேண்டிய கோலைத் தேடிக் குழைந்து வளையும் பூங்கொடி போலானாள்.
பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/50
Appearance