பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஞானப் பூங்கொடி 9 மாறில் மாமணி வண்ணன் மேல் இவள் மால் உறு கின்றாளே." (காறை - கழுத்தணி, கூறை-ஆடை, அயர்க்கும் - மறக்கும்; தேறி தெளிந்து; மாறுஇல் . ஒப்பற்ற: மால் . மோக.) என்று பேசுகின்றார் ஆழ்வார். இத்தகைய பாசுரங்களும் கோதையின் காதில் விழுந்தவைதாம். இவை இவள் காதில் ரீங்காரம் செய்து இவளுடைய காதலை அதிகரிக்கச் செய்திருக்க வேண்டும். இப்படியெல்லாம் கோதையின் காதல் அதிகரிக்க, இவளைப் பற்றிய கவலை வைராக்கியம் நிறைந்து ஆழ்வாரின் உள்ளத்தில் ஆழ்ந்த கவலையை உண்டாக்கி இருக்கவேண்டும். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி: தான் கண்ணனுக்குத் தகுந்த காத்லி என்ற கருத்து கோதையிடம் நாளுக்கு நாள் உறுதிப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஒரு சமயம் பெரியாழ்வார் இறைவனுக்குத் தொடுத்து வைத்திருந்த மால்ைகளை எடுத்துப் பார்த்தாள். பலவகையான நிறமும் மணமும் உள்ள மாலைகளை உற்று நோக்கினாள். அவை யாவும் தன் திருத்தகப்பனாரின் கை வண்ணத்தால் தெய்விக அழகு பெற்றிருப்பதாகத் தோன்றியது. அவற்றைத் தான் சூட்டிக் கொண்டு நிலைக்கண்ணாடியின் முன் நின்று கொண்டு. பெருமிதத்துடன் பார்த்து மகிழ்ந் தாள். பின்னர் அவற்றைக் கசங்காமல் அப்படியே பூக் கூடையில் வைத்து விட்டாள். இப்படிப் பல நாட்களாக நடந்து வந்தது. இதையறியாத ஆழ்வார் மாலைகளை வழக்கம்போல் ஆலிலைப் பள்ளியானுக்கு அணிந்து வந்தார். அவை என்றுமில்லாத மணமும் ஒளியும் பெற்றுத் திகழ்ந்ததை அருச்சகர்கள் கண்டு அதிசயித்தார்கள். ஆழ்வாரின் பக்தி முதிர்ச்சியே இந்தச் சிறப்புக்குக் காரணம் 10. பெரியாழ், திரு. 3.7:8. இந்தப் பதிகமும் அடுத்த பதிகமும் ஆழ்வார் நற்றாய் நிலையிலிருந்து பேசுபவை.