பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி if பெருமாளுக்குச் சாத்தினார். வீடு திரும்பும் போது தம்முடைய செல்வச் சிறுமியின் அடாத செயல் ஆலிலைப் பள்ளியானுக்கு எவ்வளவு அதிருப்தி உண்டாக்கியிருக்க வுேண்டும்? என்று எண்ணிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார். அன்றிரவு பெரியாழ்வாருக்கு உறக்கம் சரியாக வர வில்லை. பெருமூச்சுவிட்டு படுக்கையில் புரண்டு கொண் டிருந்தார். தம் மகள் செய்த அபசாரம் மன அமைதியைக் குலைத்து விட்டது. சிறிது நேரத்தில் கனவு வந்தது. அந்தக் கனவில் ஆலிலைப் பள்ளியான் தோன்றி, ஆழ்வீர், தும் திருமகள் சூடிக்கொடுத்த மாலையே! நறுமணம் மிக்குநம் உள்ளத்திற்கு நனி உகப்பாவது காண்; ஆதலால் அத்தன் மைத்தான தொடை மாலையையே நாடோறும் நமக்குக் கொண்டு வருவீராக!' என்று அருளிச் செய்தனன், உறக்கம் கலைந்து எழுந்ததும் ஆழ்வார் தம் கனவை நினைந்து பெருவியப்புற்றார். தாம் கண்டது கனவு என்றே தோன் 9 வில்லை. எல்லாம் நேர் காட்சியாக நடந்தனவாகவே தோன்றியது. அதை நினைக்க நினைக்க:இஅது மீண்டும் மீண்டும் தம் கண் முன் நடைபெறுவது போல் இருந்தது. என்ன பேறு பெற்றேன்? என் அருமைச் சிறுமியால் பெற்ற பெரும் பேறல்லவா இது?’ என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார்; மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார். அன்று முதல் ஆழ்வார் தாம் கட்டிய மாலைகளைக் கோதை முன் வைத்து அம்மா, குழந்தாய்! நீ நேற்றுச் சூடிக் கொண்டதுபோல் இனறும் கண்ணாடி முன் நின்று இந்த மாலைகளைச் சூடிப் பார்த்துக் கொடுத்தருள்க' என்று கொஞ்சியும் கெஞ்சியும் வேண்டினார். கோதை வியுப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே அடைந்தவளாய் அவற்றைச் சூடிக் கொண்டாள்; பிறகு நாணத்தால் தலைகுனிந்து நின்றாள். பிறகு மாலைகளை எடுத்துப் பார்க்கும்போது அவை அபூர்வ மணமும் அழகும் கொண்டனவாக