பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஞானப் பூங்கொடி, i3. தமிழ்ப் பிரபந்தம். இது முதலாவதாக அருளிச் செய்யப் பெற்ற பிரபந்தமாகும். கண்ணபிரானைப் பெறுகைக்காக மார்கழித் திங்கள் முழுதும் நோன்பு நோற்ற ஆண்டாள் அவன் கலவியை எதிர்பார்த்தும் அவன் வந்து கலக்கவில்லை. இந்நிலையில் ஏற்பட்ட அநுபவங்களைத் தொகுத்து வெளியிடுவதாக அமைந்தது காச்சியார் திருமொழி என்ற பிரபந்தம். இதுவும் பாவனா சக்தியின் விளைவே. இது பிந்திய பிரபந்தம். ஆண்டாளது காதலின் முறுகிய நிலையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஆண்டாள் திருமணம் : திருமணத்திற்கு ஏற்ற பருவம் வந்தும் இவளுடைய திருத்தந்தையார் இவளுக்கேற்ற கொழுநனைக் காணப்பெறாது கவலையுற்றார். இவளை யழைத்து நீ யாருக்கு வாழ்க்கைப்பட விரும்புகின்றாய்?" என்று வினவ, ஊனிடை யாழி சங்குத் தமர்க்கென்(று) உன்னித்து:எழுந்தனன் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் . என்று மறுமொழி பகர்ந்தாள். பட்டர்பிரான் பின்னை எங்ங்ணம் நிகழ்வது? என்று கேட்க, சூடிக் கொடுத்தாள். பெருமாளுக்கு உரியவளாவேன் என்று மறுமொழி கூறின்ாள். . . .” - . பின்னர் விஷ்ணுசித்தர், நூற்றெட்டுத் திருப்பதி எம்பெருமான்களுள் யாருக்கு வாழ்க்கைத் துணைவியாக விரும்புகின்றாய்?" என்று விசாரித்தார், கோதையின் வேண்டுகோளுக்கிணங்க, பட்டர் பிரானும் ஒவ்வொரு எம்பெருமான்களுடைய சிறப்புகளை எடுத்துக் கூறிக் கொண்டே வந்தார். தந்தையார். வடமதுரையில் எழுந் 11. நாச். திரு. 1: 5