பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

ஆழ்வார்களின் ஆரா அமுது


தருளியுள்ள கண்ணபிரானின் வரலாற்றை எடுத்துக் கூறினார்; அதனைக் கேட்ட ஆண்டாளுக்கு மயிர்ச் சிலிர்ப்பு ஏற்பட்டது. திருவேங்கடமுடையானது வர லாற்றைக் கூறியபொழுது முகமலர்ச்சி தோன்றியது. திருமாலிருஞ்சோலை மலை அழகரது வடிவழகை அறிந்த மாத்திரத்தில் மன மகிழ்ச்சி உண்டாயிற்று. அரங்கனது மகிமையைக் கேட்டவுடனே அளவற்ற ஆனந்தம் அடைந்து நின்றாள். அப்பொழுது அந்தந்தத் திருப்பதி எம்பெரு மான்கள் ய | வ ரு ம் ஆண்டாளது சுயம்வரத்தை உத்தேசித்து சீவில்லிபுத்துருக்கு எழுந்தருளி அவளது ஞானக்கண்ணுக்குப் பொருளாயினர். இவளோ அவர் களுள் அரங்கப் பெருமானிடமே உள்ளத்தைச் செலுத்தி அவனையே தனது கணவனாக உறுதி செய்தாள்; அவனையே நாடோறும் சிந்தித்திருந்தாள். இதனைக் கேட்ட ஆழ்வார் நம் பெருமாள் இவளை மணத்தல் கூடுமோ?’ என்று சிந்தித்தவண்ணம் இருந்தார். இந்நிலையில் திருவரங்கப் பெருமான் இவர்தம் கனவில் எழுத்தருளி ஆழ்வீர்! உமது திருச்செல்வியைப் பெரிய கோயிலுக்கு அழைத்து வாரும்; அவளை நாம் ஏற்றுக் கொள்வோம்' என்று அருளிச் செய்தான். இதனால் ஆழ்வார் கவலை நீங்கியவராய் மகிழ்ந்திருந்தார். அரங்க நாதன் தன் கோயிற் பரிசனங்கள் கனவிலும் தோன்றி சகலவித மங்கள வாத்தியங்களுடனும் இதர ஏற்பாடு களுடனும் ஆண்டாளை நவரத்தினம் இழைத்த பல்லக்கில் ஏற்றி அழைத்து வருமாறு பணித்தான். அவர்களும் சீர்வில்லிபுத்துரர் சென்று பெரியாழ்வாரைச் சந்தித்து அரங்கன் கட்டளையை விண்ணப்பம் செய்தனர். செவிக்கு அமுதமான இச்செய்தியைக் கேட்ட அளவில் பெரு மகிழ்ச்சியுற்றார் ஆழ்வார். கோதையும் அவள் தாதையும் ஆலிலைப் பள்ளியான் சந்நிதி சென்று அரங்கனது நியமனத்தை விண்ணப்பம் செய்து இசைவு பெற்று திருவரங்கத்திற்குப் பயணப்பட்டனர்.