பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞானப் பூங்கொடி 15 இச்செய்தி பாண்டிய மன்னன் செவியில் பட்டதும் தானும் திருமண விழாவை உடனிருந்து சிறப்பாக நடத்திக் களிகூர விரும்பினான். சிரீவில்லிபுத்துரையும் திருஅரங்க நகரையும் இவ்விரண்டிற்கும் நடுவிலுள்ள நெடுவழி யையும் பல்வேறு விதமாக அலங்கரித்து விழாக்கோலம் பூணச் செய்தான். தானும் தன் யானை, குதிரை தேர், காலாட்படை பலத்துடன் ஆழ்வார் பக்கல் வந்து சேர்ந் தான். இவ்வளவு சிறப்புடன் ஆண்டாளை மணிச்சிவிகையில் எழுந்தருளப் பண்ணி மங்கல ஒலியுடன் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தான். பெரியபெருமாளின் முன் மண்டபத்தில் பிராட்டியை நிறுத்திப் பெருமாளைச் சேவிக்கச் செய்தனர். பெரியபெருமாளின் பேரழகு இரும்பை சர்க்கும் காந்தம் போல ஆண்டாளைக் கவர்ந்தது. அவளும் சிலம்பார்க்க சீரார் வளையொலிப்ப அன்ன மென்னடை கொண்டு ஆனந்தக் கடலில் ஆழ்ந்த வண்ணம் அரங்கன் திருவடி வருடக் கருதினாள். அரவப்படுக்கையை மிதித்தேறி பெரியபெருமாளின் திருமேனியில் கலந்து அவனை என்றும் பிரியாதிருக்கும் நிலையை அடைந்தாள். ஆழ்வார் பெற்ற அருளிப்பாடு : இந்த தெய்வக் காட்சியை ஆழ்வாரும் அவர் சீடனான பாண்டியன் உள்ளிட்டாரும் சேவித்து அதிசயித்து நின்றிருந்தனர், திருவரங்கமுடையான் அர்ச்சக முகமாக ஆழ்வாரை அருகில் அழைப்பித்து, ஆழ்வீர் திருப்பாற்கடல் நாதன் போல் நீரும் நமக்கு மாமனாராகி விட்டீர்” என்று முகமன் கூறி தமது தீர்த்தம், திருப்புரிவட்டம், திருமாலை, சடகோபன் முதலியவற்றைச் சாதிக்கச் செய்தான். :வில் விபுத் துரருறைவானுக்குத் தொண்டு பூண்டிரும் என்று கூறி விடை கொடுத்தருளினன். ஆழ்வாரும் வில்லிப்புத்துனர் திரும்பி பல்வேறு மலர்களுடன் ஆர்வம் என்பதோர் மலரையும்