பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

ஆழ்வார்களின் ஆரா அமுது


இட்டு எண்பத்தைந்து ஆண்டு காலம் வாழ்ந்திருந்து பேராசத்தப் பேரும்பதம் அடைந்தார். 3 3 அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து.' என்ற மாமுனிகளின் பாசுரத்தால் இப் பெருமாட்டியின் வரலாற்றை நிறைவு செய்கின்றோம். அருளிச் செயல்களில் ஆழங்கால் படுதல் : இப் பெருமாட்டி அருளிச் செய்த திருப்பாவையில் 30 பாசுரங் களும், நாச்சியார் திருமொழியில் 143 பாசுரங்களும் உள்ளன. இவை இரண்டும் முதலாயிரத்தில் பெரியாழ்வார் திருமொழியை அடுத்து அமைக்கப் பெற்றுள்ளன. இவை இரண்டும் முத்திரைக் கவிகளாகும். இந்த இரண்டு பிரபந்தங்களிலும் பொதுவாக அமையப் பெற்ற திரு' என்ற அடைமொழிக்குச் சிறப்புப் பொருள் உண்டு. ஒன்று. எம்பெருமான் அர்ச்சாவதாரமாய் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்கட்கும் அவன் பெருமையைப் பேர்ற்றி 12. இந்த வரலாறு பின்பழகிய பெருமாள் சீயர் குரு. பரம்பரை, பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்ய: சுவாமிகளின் திவ்வியார்த்த தீபிகை முதலியவற்றில் கூறப் பெற்றதாகும். 13. உ. தே. ர. 24. 14. மூத்திரைக் கவிகள் : ஆசிரியர் பதிக இறுதியில், அல்லது பிரபந்த இறுதியில் தம் பெயரையும் பாசு: எண்ணிக்கையும்.தோன்றும்ாறு பாடப் பெறுபவை.