பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 17 யுரைக்கும் நூல்கட்கும் திரு என்ற அடைமொழியை அமைத்தல் வழக்கு. எ.டு. திருக்குடந்தை; திருச்சந்த விருத்தம். சைவத்தில் திருக்கழிப்பாலை, திருச்சிற்றம்பலக் கோவையார் என்பன போன்றவை. இரண்டு: திரு' என்பதற்கு இலக்குமி, அழகு, செல்வம், தெய்வத்தன்மை என்ற பொருள் உண்டு. ஆகவே புருஷகார பூதையான . திருமகள் வழிபாடு, பாகவத சேஷத்துவமான ஆன்ம அழகு, இறைவனுக்குத் தொண்டு பூண்டொழுகுதலாகிய கைங் கரியச் செல்வம், சீரிய பயனைத் தருதற்கேற்ற தெய்வத் தன்மை பலவும் இவ்விரு நூல்களுள்ளும் இடங்கொண்டிருத் தலின், திரு' என்ற அடைமொழி இந்நூற் பெயர்கட்கு வழங்கப் பெற்றுள்ளது. திருப்பாவை : முதலில் திருப்பாவையில் ஆழங்கால் படுவோம் முதல் நூல், கருத்தன், அளவு மிகுதி பொருள், செய்வித்தோன் தன்மை என்பவற்றுள் ஏதேனும் ஒன்று ஒரு நூலிற்குப் பெயராய் அமையும் என்பது இலக்கிய மரபாகும். அவற்றுள் உட்பொருள் இந்நூற்குப் பெயராய் அமைந்தது. நாமும் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்’ (3), பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார் (13), எம்பாவாய்' என்பன இதனை வலியுறுத்தலைக் காண லாம். இங்குப் பாவை’ என்பது பெண்; கன்னிப்பெண். பாவை என்பதற்குப் பதுமை’ என்ற பொருளும் உண்டு. அவர்களால் நோற்கப் பெறும் நோன்பு பாவை நோன்பு"; மார்கழி நோன்பு. பாவையைக் கொண்டு பாவையர் 15. புருஷகார பூதை - பரிந்துரை கூறுபவள். புருஷ காரம் - தகவுரை. 16. மார்கழி நோன்பு: இதன் விளக்கத்தை மார்கழி நோன்பின் வரலாறு' என்ற இந்த ஆசிரியரின் கட்டுரை யால் .ெ த ரி ய லா ம், ஆன்மிகமும் அறிவியலும்" (கட்டுரை ) என்ற நூல் காண்க (பாரிநிலையம், 184, பிரகாசம்சாலை, சென்னை-600 108). 2