பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 19 இங்ங்ணமே இருடிகளையும் ஆழ்வார்களையும் ஒப்ப நோக்கினால் இருடிகளின் பக்தி அணுவளவாகவும் ஆழ்வார் களின் பக்தி மலையளவிலும் காணப்பெறும். இங்ங்ேைம மற்றைய ஆழ்வார்களின் பக்தியையும் பெரியாழ்வார் பக்தியையும் ஒப்பிட்டு நோக்கினால் மற்றையோர் பக்தி அணுவளவாகவும் பெரியாழ்வாரின் பக்தி மலையள வாகவும் தோற்றம் அளிக்கும், பெரியாழ்வாரின் பக்தி யையும் அவரது அருமை மகள் ஆண்டாள் பக்தியையும் சீர்தூக்கினால் பெரியாழ்வார் பக்தி அணுவளவிலும், ஆண்டாள் பக்தி மலையளவிலும் தோற்றா நிற்கும் தவிர, ஆண் ஆணைக் கண்டு நட்புக் கொள்வதைக் காட்டிலும் பெண் ஆணைக் கண்டு நட்புக் கொள்ளுதல் பள்ளமடை யாக இருக்கும். இந்தப் பொழிவில் பாசுரங்களை விவரமாக ஆயப் போவதில்லை. பிரபந்தத்தின் அமைப்பை மட்டிலும் எடுத்துக் காட்டுவேன். இப்பிரபந்தம் மூன்று பகுதியாக அமைந்தது. முதற்பகுதி முதல் ஐந்து பாசுரங்களும் (1.5) பாயிரமாக அமைந்துள்ளன; இப்பகுதி நூலின் உயிர்நிலை; நூற்பொருளைத் தெளித்துக் காட்டும் ஆடிபோன்றது. இரண்டாம் பகுதி ஆறுமுதல் பதினைந்து முடிய பத்துப் பாசுரங்கள் (6-15) ஆழ்வார்கள் பதின்மருக்கும் ஊக்க மூட்டி உள்ளுறைப் பொருள் அமைந்திருப்பதாகக் கூறுவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள். 20. ஆண்டாள் இறைவனோடு சேர்ந்து விட்டதால் அவளையும், மதுரகவிகள் இறைவனைப் பாடாமையால் அவரையும் நீக்கி ஆழ்வார்கள் பதின்மர் என்பதாகக் கொள்ளும் மரபு ஒன்றும் உண்டு. 21. திருப்பாவை-திவ்வியார்த்த தீபிகை காண்க. இந்த ஆசாரியர் திருப்பாவை.ஆழ்பொருள் விளக்கில் . பாகவதர்களைப் பள்ளி யுணர்த்துவதாகவும் உள்ளுறைப் பொருள் கூறுவர். ஆண்டுக் கண்டு இது தெளியப்படும்.