பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 ஆழ்வார்களின் ஆரா அமுதி இது சுவாபதேசப் பொருள்; அஃதாவது உள்ளுறைப் பொருள். செல்வம், செயல், குணம் இவற்றில் பத்து வகைப்பட்ட ஆயர் சிறுமிகளை அஞ்ஞானத் துயிலிலிருந்து ஞான விழிப்பிற்குக் கொணர்வது வெளிப்படைப் பொருள். மூன்றாம் பகுதி: ஆயமகளிசை எம்பெருமானின் கைங்கரியத் திற்குத் தகுதியுடையவராகச் செய்தல் இப்பகுதியாகும். ஆகவே, இப்பிரபந்தம் அஞ்ஞானத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆன்மாக்களுக்கு ஞானம் ஊட்டி இறையுடன் கலந்து இன்பந்துய்க்கச் செய்தலை விளக்குவதாகக் கொள்ளலாம். அன்றியும், 'ஓம்' என்னும் பிரணவம், வைணவ மந்திரங் களாகிய திருமந்திரம், துவையம், சரமசுலோகம் என்ப வற்றைத் தன்னுள் கொண்டுள்ளதைப் போல் மார்கழித் திங்கள் எனத் தொடங்கும் முதற்பாசுரமும் மற்ற இருபத் தொன்பது பாசுரங்களின் பொருளையும் தன்னகத்தில் கொண்டுள்ளது. இவ்வொரு பாசுரத்தைக் கொண்டே எல்லாப் பொருள்களையும் அறியலாம். இவற்றை இங்கு விளக்குவதற்குக் காலம் போதாததால் இவற்றை விட்டு வைக்கின்றேன். மேலும் அர்த்த பஞ்சகங்களின் தத்துவங்களை ஆண்டாள் அமைத்துப்பாடும் அழகையும் இச்சிறு பிரபந்: தத்தில் கண்டு மகிழலாம். அர்த்தப் பஞ்சகம் என்பது என்ன? இதனை ஈண்டு விளக்குவேன். (1) ஆன்மாவின் இயல்பு, (2) சசுவரனது இயல்பு, (3) ஆன்மா அடையும் பயன், (4) அப்பயனை அடைவதற்கு உபாயம், (5) அப்பயனை அடைவதற்குப் பகையாய் உள்ளவைகள்-என்ற ஐந்து பொருள்களை விளக்கமாக அறிதல் அர்த்த பஞ்சக. ஞானம்" என்று சொல்லப்படும். ஆன்மாவின் இயல்பை அறியுங்கால் நித்தியர், முத்தர், பத்தர், கேவலர், முமுட்சுகள் என்ற ஐந்துவகை ஆன்மாக்களைப் பற்றிய ஞானம் ஏற்படும். இறைவனது இயல்பை அறியுங்கால் இறைவன் பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித் துவம், அர்ச்சாவதாரம் என் ஐந்துவிதத் திருமேனிகளைக்