பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஞானப் பூங்கொடி 23. எழுந்திராய் (8), மாமீர் அவளை எழுப்பீரோ? (9), பேண்டொருநாள், கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? (10}, எற்றுக்குறங்கும் பொருளே (11), இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?" (12), பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ? (13) எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும், நங்காய் எழுந்திராய் (14) எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ? (15) என்பவற்றால் உறங்குகின்ற விரோதி சொரூபம் காட்டப்பெறுகின்றது. பகவத்சொரூபமாகிய இரட்சகத்துவம்: இது 16 முதல் 20 வரை உள்ள பாசுரங்களால் உணர்த்தப்பெறுகின்றன். சம்சாரக் கடலில் மூழ்கித் தம்மை மறந்து கிடக்கும் சீவர்களை மறந்து பகவான் தன்னை அடைந்த (ஆச்ரயித்த) நித்திய முத்தர்களிடையே மயங்கியவனாய் உறங்கிக் கிடப்பதை உணர்ந்து அவனை எழுப்புவது உணர்த்தப் பெறுகின்றது. ஆயர்சிறுமியராய எங்கட்கு மணிவண்ணனாய மாயன் பறையைத் தருகின்றேன் என்று நேற்றே சொன்னான். உறக்கத்தை விட்டு எழுந்திருக்கும் படி திருப்பள்ளி எழுச்சி பாடவேண்டும்" என்று வாயில் காப்பவனிடம் சொல்லுகிறார்கள் ஆயச்சிறுமிகள் (16). அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமானே உறங்காது எழுந்திராய், செம்பற் கழலடிச் செல்வா பல தேவா, உம்பியும் நீயும் உறங்கேல் (17) என்பதனாலும், பின்னர் நப்பின்னைப் பிராட்டியையும் (18) எழுப்பு வதனாலும், கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல், வைத்துக்கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்,.. மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண் (19) என்பத னாலும், முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று, கப்டம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்... செற்றார்க்கு, வெப்ப கொடுக்கும் விமலா துயிலெழாய் (20) என்பதனாலும்