பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24 ஆழ்வார்களின் ஆரா அமுது இறைவனை எழுப்பி அவனுடைய இரட்சகத்துவத்தை நினைவூட்டுவதை அறியலாம். கையற்ற நிலையும் பிரபத்தியும்; இவை 21 முதல் 25 வரையுள்ள பாசுரங்களால் உணர்த்தப்பெறுகின்றன. சமாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற் கண் ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே, போற்றியாம் வந்தோம் (21) என்பதனாலும், அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான, பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே, சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்" (22) என்பதனாலும், ஆன்மாக்களின் கையற்ற நிலை உணர்த்தப் பெறுவதை அறியலாம். அடுத்து, அடி போற்றி, திறல்போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல்போற்றி என்று போற்றுதல் செய்து என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான், இன்று யாம் வந்தோம் (24) என்பதனாலும் அருத்தித்து வந்தோம் (25) என்பதனாலும் பிரபத்தி உணர்த்தப் பெறுகின்றது. மோட்ச பிராப்தி: இது 26 முதல் 30 முடியவுள்ள பாசுரங்களால் உணர்த்தப் பெறுகின்றது. கண்ணனைக் கண்டு நோன்புக்கு வேண்டிய சங்கு முதலிய பொருள்களை கேட்கின்றனர் (26). கண்ணனைக் காண்டலே மோட்ச மாகும். நோன்பிற்கு தாம் பெற வேண்டிய சூடகம் முதலிய பொருள்களைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றார்கள் (27). அறிவொன்றும் இல்லாத ஆய்குலத்து உன் தன்னைப் பிறவிப் பெறுந்தனையாம் உடையோம்'... உன் தன்னோடு, உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது’ (28) என்பதனால் தாம் பெற்ற பேற்றைக் குறிப்பிடுகின்றனர். எங்களைக் குற்றேவல் கொள்ளாமற் போகாது... நாங்கள் வந்தது இவற்றைப் பறை கொள்வான் அன்று காண்’, நாங்கள் நோன்பு என்ற ஒன்றை வியாஜமாகக் (Pretext) கொண்டு. வந்தோமேயன்றி எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு, உற்றோமேயாவோம் உனக்கே நாம்