பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 25 ஆட்செய்வோம்’ (29) என்பதனால் மோட்ச பிராப்தியான கைங்கரியம் வேண்டுவதைக் குறிப்பிடுவதை உணரலாம். இதுகாறும் கூறியவற்றால் தத்துவக் கருத்துகள் மட்டிலும் காட்டப்பெற்றன. & பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - கோதைதமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை வையம் சுமப்பதும் வம்பு. இவையம் - மனித சரீரமாகிய உயர்ந்த வண்டி: வம்பு . புது1ை ! என்ற வெண்பாவாலும் இவற்றை அறியலாம்.

  • திருவாய்ப்பாடியில் பெண்களுக்குக் கிருஷ்ணன் சமகாலமாகையாலே கிருஷ்ணனை நேரில் காணும் பேறு: கிடைத்தது. இத்தகைய நேர் காட்சியை ஆண்டாள் பாவனாசக்தியால் பெற்றாள். அவளிலும் பிற்பட்டவர்கள் அப்பேறு பெறவேண்டில் இப்பாசுரங்களின் உக்தி மாத்திரம் போரும் என்க" எ ன் ப. ர் பிரதிவாதிபயங்கரம். 'விடிவோடே எழுந்திருந்து முப்பது பாட்டையும் அதுசந் தித்தல், மாட்டிற்றிலனாகில் சிற்றஞ் சிறுகாலே (29) என்கின்ற பாட்டை அநுசந்தித்தல், அதுவும் மாட்டிற் நிலனாகில் நாம் இருந்த இருப்பை நினைப்பது' என்று பட்டர் அருளிச் செய்வர். நாம் இருந்த இருப்பை" என்றது- நாம் (பட்டர்) இப்பிரபந்தத்தை அதுசந்தித்து ஈடுபட்டிருந்த இருப்பை என்றபடி.

இலக்கிய நயங்கள்: இச்சிறு பிரபந்தத்திலுள் சில இலக்கிய நயங்களை மட்டிலும் சுட்டிக்காட்டுவேன்.