பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 33 வளைத்தல் கூடற்குறி என்ற திருநாமங்களாலும் வழங்கப் பெறும். திருமழிசை பிரானும் அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண, இழைப்பன் திருக்கூடல் கூட' (நான். திருவந். 39) என்றருளிச் செய்திருப்பது ஈண்டு நினைத்தல் தகும் - இச்செயலை அநுகரித்து ஆண்டாளின் நான்காவது திருமொழி அமைகின்றது. ஒவ்வொரு பாசுரமும் கூடிடுகூடலே என்று முடிவு பெறுகின்றது. இ ந் த த் திருமொழியிலும் ஒரு பாசுரத்தைக் காட்டுவேன். காட்டில் வேங்கடம் கண்ண புரநகர் வாட்டம் இன்றி மகிழ்ந்துறை வாமனன் ஓட்டரா வந்துனன் கைப்பற்றித் தன்னொடும் கூட்டு மாகில், கூடிடு கூடலே (2) (வாட்டம். மனக்குறை; ஒட்டரா.ஒடி ஒட்டம் தரா.ஒட்டி-ரா.1 எம்பெருமான் என்னோடு அணைய வேண்டும் என்று இருவேங்கடமலை, திருக்கண்ணபுரம் முதலிய திருப்பதி களில் வந்து நிற்கின்றான்; எனக்கு இசைவு உண்டோ? இல்லையோ? என்று ஐயுற்றுத் தாமதித்து நிற்கின்றான் போலும்! அப்பெருமான் என்னுடைய அதிக ஆவலை நன்கு அறிந்து சடக்கென்று ஓடிவந்து என்னைத் தன்னோடே அணைத்துக் கொள்ளுமாறு விதிவாய்க்க வேண்டும்' - என்று எண்ணுகின்றாள். காட்டில் வேங்கடம் : தண்டகாரண்ய வனத்தில் இருடி களோடு கூடியிருந்து வனவாச ரஸம் அநுபவித்தபடிக்கு ஒப்பாகும் திருமலை வாசம் என்பதைக் காட்டுகின்றது. இத் தொடர். கண்ணபுரநகர்: வனவாசம் முடிந்து திரு லுயோத்தியில் அனைவரோடும் கூடியிருந்து நகரவாச ரஸம் அநுபவித்தபடிக்கு ஒப்பாகும் - திருக்கண்ணபுரவாசம் ஏன்பதைக் காட்டுகின்றது. இத்தொடர். திருமலையை 3