பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

ஆழ்வார்களின் ஆரா அமுது


விஞ்சுவதனால், கழி - மிக படர் - துன்புறுகின்ற; கிளவி - சொல் என்பது இதன் பொருளாகும். தலை மகனைக் கானலுற்று வருந்தாநின்ற தலைமகள் தனது வேட்கை மிகுதியால் கேளாதனவற்றைக் கேட்பனவாக விளித்து... கூறாதிற்றல் என்பர் பேராசிரியர்.”* ஆதாவது, காமம் மிக்கதனால் உண்டாகிய பெருந்துன்பம் காரண மாகக் கேட்டலும் அதற்கு மறுமொழி கூறலும் இல்லாத, புள் முதலியவற்றை நோக்கிக் கூறுதல். ஞாயிறு திங்கள் அறிவேகாணே கடலே கானல் விலங்கே மானே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே அவையல பிறவும் நுதலிய நெறியால் சொல்லுன போலவும் கேட்குங் போலவும் சொல்லியாங் கமையும் என்மனார் புலவர்' என்ற தொல்காப்பிய நூற்பாவை, இதற்குரிய விதியாகக் கொள்ளலாம். மேலும், ஒரு பயன் சிந்தித்துச் சொல்லுமோ எனின், சொல்லாள்; குழவி அழுதாற்போல் வேட்கை மிகுதியாற் சொன்னவிடத்து அப்பயன் நிகழும், குழவி அழுகின்றது, எனக்குப் பால் தம்மின்; நீர் ஆட்டுமின்’ என்றழாது, தூக்கம் வந்ததாக அழும்; அழ,அறிவார் பயன் எய்துவிப்பர் என்பது என்ற இறையனார் களவியலின் உரையாலும் இஃது அறியப்படும். இங்ங்னம் ஆண்டாள் குயிலை வேண்டுவதாக அமைந்த பதிகத்தில் (5 குயிற்பத்து), ஒரு பாடலைக் காட்டுவேன். மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை உகந்தது காரண மாகஎன் சங்குஇழக்கும் வழக்கு உண்டே? 24. திருக்கோ. 173 இன் உரை. 25. தொல், செய்யு. 192 26. இறை. கள. 30 இன் உரை. எ.டு. குறள் 1210: குறுத். 107; திருக்கோ. 177 காண்க.