பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 37 புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே! பன்னி எப்போதும் இருந்து விரைந்துனன் பவளவா அன்வரக் கூவாய். (1) (ஞாழல் - தாழை; பொதும்பு - பொந்து) என்பது முதற்பாடல். இங்கு சங்கு இழத்தலாவது - கை வளை கழன்றொழிதல்; தலைமகனைப் பிரிந்து வருந்து வதனால் நாயகின் உடம்பு ஈர்க்குப் போல் இளைத்து கைகளில் பொருத்தமாக அணியப்பட்ட வளைகளும் அவலீலையாகக் கழன்று விழும். ஈண்டு வழக்காவது, நியாயம்; தன்னை யாசைப்பட்டவர்களுக்கு வளையிழந்து நிற்கைதான் பலன்’ என்று இப்படி ஒரு நியாயம் அவன் தந்த சாத்திரங்களில் உண்டோ? என்கின்றாள். "பன்னி.கூவாய் : என்ற ஈற்றடியில் அக்குயில் செய்ய வேண்டியதை நியமிக்கின்றாள். ஒரு கால் சொல்லி ஓய்ந்து விடாமல் அவன் திருவுள்ளத்தில் படும்படி பலகாலும் சொல்லி, அவன் விரைந்தோடி வந்து என்னோடே கூடும்படியாக அவனைக் கூவுமாறு வேண்டுகின்றாள். “என் பவளவாயன் என்ற ஸ்வாரஸ்யத்தை நோக்கிப் பெரியவாச்சான் பிள்ளையின் அருளிச் செய்ல்: *என்னோடே கலந்து போகிற சமயத்தில் அனைத்து ஸ்மிதம் (சிரித்தல்) பண்ணி, வருமளவும் ஜீவித்திருக்கும்படி விளை நீரடைத்துப் போன போதைச் செவ்வியோடும் அதரத்தில் பழுப்போடும் வந்தணைக்கும்படியாகக் கூவப் பாராய் என்கின்றாள்' என்பது. குயிலும் அவள் விருப்பப்படி கூவவில்லை; கண்ண பிரானும் முகம் காட்டவில்லை. இவளுக்கு அடியோடு முகங்காட்டாதொழியில் இவள் தரித்திருக்க மாட்டாள் என்று கருதிய கண்ணன், கனவில் திருமணக் காட்சியைக் காட்டுகின்றான். திருமணத் தொடக்கம் முதலாகக்