பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 41 சாறெல்லாம் சுவறிப் போவதுபோல் என் உடம்புடன் அணைந்து என் ஆற்றல் முழுவதையும் கொள்ளை கொண்ட பெருமானுக்கு நான் இங்கனம் நோவு பட்டுக் கிடக்கும் நிலையை எடுத்துக் கூறுங்கள் என்கின்றாள். நான்காவது செய்தி : கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள் தங்குமேல் என் ஆவி தங்குமென்று உரையிரே (7) அவர் என்னுடன் கலவி செய்ய வருவாரென்று நம்பி முலைத் தடங்களில் குங்குமக் குழம்பு பூசி அணி செய்து வைத்துள்ளேன்; அதனைப் பயனுடைய தாகும்படிச் செய் வாராகில் தரிக்கலாம் என்று சொல்லுங்கள் என்கின் றாள். ஆவிதங்கும்" என்ற சொல் நயம் நோக்கத்தக்கது. *ஒரு நாள் அனைவது போகத்துக்குப் போதாது; அஃது உயிர் தரிப்பிற்கே சாலும் என்ற குறிப்பு அறிந்து மகிழத் தக்கது. ஒரு நாள் தங்குமேல் என்னாவி தங்கும் குணஜ் ஞானத்தாலே த்ரியாளோ என்றிருக்க வொண்ணாது; அணையுமாகில் தரிக்கலாம் என்பது வியாக்கியான சூக்தி. இறுதியாகத் தன் நிலைமையை மீட்டும் ஒரு முறை புலப்படுத்தி உள்ளத்தைத் தொடுமாறு கூறும் செய்தி நம் உள்ளத்தையும் நெகிழச் செய்கின்றது. இராக நாமங்களைச் சொல்லி மழைக் காலத்தில் எருக்கம் பழுப்புகள் அற்று விழுவதுபோல் ஒசிந்து கிடக்கின்றேன். இந்நிலையில் கிடந்து தவிக்கும் எனக்கு நெடுகிச் செல்லு: கின்ற காலத்தில் ஒரு நாளாகிலும் ஒரு வாய்ச்சொல் அருள மாட்டாரோ? (8) என்று தான் ஏங்கி நிற்கும் நிலையைப் புலப்படுத்துகின்றாள். அதன் பின்னர் அவள் பேசும் பேச்சுதான் நம் உள்ளத்தில் ஆழப் பதிகின்றது. இஃது