பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

ஆழ்வார்களின் ஆரா அமுது


எம்பெருமான் திருவுள்ளத்தைக் கட்டாயம் தொடத்தான் செய்யும். மதயானை போல் எழுந்த மாமுகில்காள்! வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்! பாம்பனையான் வார்த்தைஎன்னே! கதியென்றும் தானாவான் கருதாதோர் பெண்கொடியை வதைசெய்தான் என்னும்சொல் வையகத்தார் மதியாரே (9) :பதி. இருப்பிடம்; தான் - எம்பெருமான்; வதை . கொலை; மதியார் . மதிக்க மாட்டார்கள்;

  • திருவனந்தாழ்வானிடம் எல்லா வித கைங்கரியங் களையும் கொள்வதுபோல் என்னிடத்தும் கொள்வன் என்றிருந்தேன்; பாம்பணையைக் கை விட்டுத் திரு மதுரையில் வந்து பிறந்த கண்ணபிரான் தேர்த்தட்டில் நின்று சொன்ன வார்த்தையை (சரமசுலோகத்தை)?? மெய்யென்று நம்பி மோசம் போனேன் பாம்போடே அணைந்து பாம்பின் தன்மையே தனக்கும் உண்டாகப் பெற்றான். அதற்கு நாக்கு இரண்டாக இருப்பதுபோல் இவனும் இரண்டு நாக்குப் பெற்றான்; பொய்யனாகி விட்டான்' என்ற கருத்து தொனித்து நிற்பதைக் கண்டு மகிழ்கின்றோம். தன்னுடைய காக்கும் தொழிலை மறந்ததோடன்றி ஒரு பெண் பிள்ளையையும் கொலை செய்தான் என்ற கருத்து உலகில் பரவுமாகில் பின்பு அவனை மதிப்பார் உண்டோ? என்று அவன் மீது கழிபேரி ரக்கமும் கொள்கின்றாள்.

ஒரு திருமொழியில் (9 - வது திருமொழி) திருமாலிருஞ் சோலைப் பெருமானை வழிபடுகின்றாள். இங்கு இரண்டு பாசுரங்கள் அற்புதமானவை. 27. கீதை 18; 66