பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஞானப் பூங்கொடி 43: நாறு கறும்பொழில்மா லிருஞ்சோலை கம்பிக்குகான் நூறு தடாவில்வெண்ணெய் வாய்கேர்ந்து பராவிவைத்தேன் நூறு தடாகிறைந்த அக்கார வடிசில்சொன்னேன் ஏறு திருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ (6)

  • மணம் கமழாநின்ற சோலைகளாலே சூழப்பெற்ற திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானுக்கு அடியேன் நூறு தடா நிறைந்த வெண்ணெ யும் நூறு தடா நிறைந்த அக்கார வடிசிலும் வாசிக கைங்கரிய ரூபமாக சமர்ப்பிக்கின்றேன். இவற்றை அவ் வெம்பெருமான் திருவுள்ளம் பற்றுவானா?” என்கின்றாள்.

எம்பெருமானர் நாச்சியார் திருமொழி காலட்சேபம் நடத்தும் பொழுது இப்பாசுர அளவில் வரும்பொழுது, *ஆண்டாளுடைய எண்ணம் சொல்லளவில் நின்றதே யொழிய செயலில் முடிந்ததாக இல்லை; அதனை நாம் தலைக்கட்டவேண்டும்" என்று அப்போதே புறப்பட்டு திருமாலிருஞ்சோலை மலைக்கு எழுந்தருளி நூறு தடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார வடிசிலும் அழகருக்கு அமுது செய்வித்தருளினார்; அங்கிருந் தவாறே சிரிவில்லிபுத்துருக்கும் எழுந்தருளி ஆண்டாளை வணங்கி நிற்க, தன் நினைவறிந்து இவர் ஆற்றிய செய லுக்கு மண்முகந்து நம் அண்ணரே! என்று சொல்லி அர்ச்சாவதார சமாதியையும் கடந்து ஏழடி நடந்து உடைய வரைத் தழுவிக் கொண்டாள் என்று பெரியோர் பணிப்பர்; இதுபற்றியே இராமாநுசருக்குக் கோயில் அண்ணன்" (கோயில் - திருவரங்கம்) என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. இதுபற்றியே வைணவ உலகம் இவரை ஆண்டாள் வாழித் திருநாமத்தில்,