பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


粤孪 ஆழ்வார்களின் ஆரா அமுது பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே! என்று குறிப்பிட்டு வாழ்த்துகின்றது. 'ஒரு பூர்ண கும்பத்துக்கு மேற்பட அதிகப்படியான வற்றை விரும்பாத எம்பெருமான் விஷயத்திலே நூறு தடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார வடிசிலும் சமர்ப்பிக்க வேண்டுவானேன்?" என்று நஞ்சீயர் சந்நிதியிலே நம் பிள்ளை கேட்க, அதற்கு யேர், திருவாய்ப் பாடி செல்வத்திற்கு இதெல்லாம், கூடினாலும் ஒரு பூரன் கும்பத்துக்குப் போராது காணும்!” என்று அருளிச் செய்தாராம். . இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ: 6 அத்திரி பகவான் ஆசிரமத்தில் ஒரு மாலையில் சென்று *நான் இராமன், இவள் மைதிலி, இவன் இலக்குவன் என்று நின்றாப் போலே வந்து நின்று இவற்றை ஏற்றுக்கொள்ள வல்லனோ? என்ற வியாக்கியான சூக்தியும் ஈண்டு அதுசந்திக்கத்தக்கது. அடுத்துப் பேசுகின்றாள்: இன்றுவர் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்கான் ஒன்று.நூ றாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் (1) என்று. அந்த எம்பெருமான் இங்கு எழுந்தருளி இவற்றை அமுது செய்துவிட்டுப் போய்விடாமல் என் இதயத்தில் நிலையாக இருந்துவிடும் பட்சத்தில் ஒழிவில் காலமெல் லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் தாம் என்று பெரியோர் எண்ணிய குறையறச் செய்திடு வேன்' என்கின்றாள். 'இன்று இத்தனையும் அமுது செய்திடப்பெறில், நான் ஒன்று நூறாயிரமாகக் கொடுப் பேன் அடியேன் மனத்தில் வந்து நேர்படில் பின்னும்