பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 47 கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித் திட் டவன்மார்பில் எறிந்துனன் அழலைத் தீர்வேனே (8) (ந்ைதல்.வருந்துதல்; கொள்ளி. அபகரித்துக் கொண் டவன்; குறும்பன் . மகளிரிடம் வம்பு செய்பவன்; கிழங்கு - வேர், அள்ளிப் பறித்திட்டு . பற்றிப் பிடுங்கி, அழல்-துக்கம்) கொள்ளும் பயனொன்றில்லாத : (ஆட்டுக் கழுத்தில் தொங்கும்) பயனற்ற முலைபோல. அதாவது எம்பெரு மானை அணைத்துக் கொள்வதற்கு உறுப்பல்லாத என்றபடி. கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு : இதனால் அவளது அளவற்ற ஆற்றாமை புலப்படும். இஃது. உள்ளுள்ள சினமும் துக்கமும் தோன்றச் சொல்லுகின்றபடி, கிழங்கு - ஆன்மப் பொருள் என்று பணிப்பர். கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு எறிந்து என் அழலைத் தீர்வேனே என்றால் போதாதோ? அவன் மார்பில் எறிந்து' என்பது எதற்காக? இம்முலைகளால் தான் படும் பாட்டை பெண்ணின் வருத்தமறியாத பெருமானான அவனும் படவேண்டும் என்ற கருத்தினால் என்பதை உணர்த்துவதற்காக, இம்முலைகள் அவன் மார்பில் ஏறி அவனைக் கும்மிக் குமைக்கவேண்டும் என்று நினைக்கின்றாள். இக்கஷ்டத்தை அவனும் பட்டானாகில் அதுவே இவளுடைய அழல் தீர்ந்தபடி போலே ஆகும் என்பது கருத்து. பதினான்காம் திருமொழியாகிய இறுதித் திருமொழி ஆண்டாள் பட்ட வருத்தமெல்லாம் திரும்படி கண்ண பிரான் வந்து சேவை தந்தருளினபடியைக் கூறுவ தாக அமைகின்றது. என் அவாவறச் குழ்ந்தாயே" (திருவாய். 10, 10:10) என்று திருவாய்" மொழியில் நம்மாழ்வார் ப்ெற்ற பேற்றினை இவளும் பெறுகின்றாள்.