பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பாணர்குல விளக்கு 2Aர்ப் பெருமக்களே, ஆசிரியப் பெருந்தகையீர், மாணாக்க மணிகளே, வணக்கம், இன்று உங்கள் முன்னர் பாணர் குலவிளக் காகத் திகழ்ந்த திருப்பாணாழ்வார் பற்றிப் பேச முன் வந்துள்ளேன். இந்தப் பாணர்கள் என்பவர் யாவர்? சங்க காலத்திலிருந்தே இசை பாடி மக்களுக்கு இசையமுதுாட்டி வாழ்ந்து வருபவர்கள். சங்க இலக்கியத் தொகுப்பில் ஒன்றாகிய பத்துப்பட்டில் உள்ள சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்ற இரு பாட்டுகளும் இவர்தம் வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டுகின்றன. இவர் களுடைய வாழ்க்கை இலக்கியச் சிறப்பு பெற்றுத் திகழ் வதைக் கண்டு மகிழ்கின்றோம். திருநீலகண்ட யாழ்ப் பாணர் என்பாரும் அவர்தம் வாழ்க்கைத் துணைவி மதங்க சூளாமணியும் சம்பந்தப் பெருமானின் திருப்பாடல் களைப் பாடிக் கொண்டே சம்பந்தப் பெருமானுடன் திருத்தலப் ப ய ண ம் செய்து வந்தனர் என்பதை ஞானசம்பந்தர் வரலாற்றால் அறிகின்றோம். சம்பந் தரைச் சந்திக்கும் முன்பே, திருநீலகண்ட யாழ்ப்பாணர் உயர் பதவியாகிய நாயனார் பதவியைப் பெற்றுவிட்டார் என்பதைப் பெரியபுராணத்தால் அறிகின்றோம்.

  • திருவேங்கடவன் பல்கலைக்கழகவிரிவுச் சொற் பொழிவுத் திட்டத்தின் கீழ் 27.1.67 இல் ஏகாம்பரக் குப்பம் கழக உயர்நிலைப்பள்ளியில் நிகழ்த்தப் பெற்ற சொற் பொழிவு.

4