பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

ஆழ்வார்களின் ஆரா அமுது


வாழ்க்கை வரலாறு : இங்ங்னமே பாணர் குலத்தில் குலவிளக்காகத் திகழ்ந்த ஆழ்வார் ஒருவரையும் காண் கின்றோம். இவர் திருவரங்கத்திற்கு அருகிலுள்ள, காவிரியின் தென்கரையிலுள்ள, ஒரு காலத்தில் சோழப் பேரரசின் தலைநகராகத் திகழ்ந்த உறையூரில் திருவவ தரித்தவர். அக்காலத்தில் இவர்கள் நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமாகக் குடிசைவாழ் பெருமக்களாகத் திகழ்ந் தனர். அக்காலத்து மக்கள் இப் பெருமக்களைத் தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கியே வைத்திருந்தார்கள். இப் பெருமக்கள் நற்கலைகளான ஆடல் பாடல்களில் வல்லவர் களாகத் திகழ்ந்தார்கள். யாழையே தெய்வமாகப் போற்றி வாழ்ந்து வந்தார்கள். இந்தத் திருக்குலத்தில் அவதரித்தவரே இன்று நாம் அறியப்போகும் இசைச் செல்வர். இவரை வேதாந்த தேசிகர் பாண் பெருமாள்' என்றே சிறப்பித்துப் பேசுவர். இவர் பிறப்பே விநோதமானது. இவரைப் பெற்றெடுத்த தாய் - தகப்பன் யாவரெனத் தெரிந்துகொள்ள இயல வில்லை. ஓர் அந்தணப் பெருமகன் கழனியிலே நெற்பயிர்க் கதிர்களுக்கிடையே கிடந்த குழந்தையே இந்தப் பாண் பெருமாள். மக்கள் யோனியில் பிறவாது பிறந்த குழந்தையை அவ்வூரில் பாணர் குலத்தில் பிறந்தான் ஒருவன் அக்குழந்தையைக் கண்டு, தன் நல்வினைப் பயன் என்று மகிழ்ந்து, தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான்; இவனுக்கு மகப்பேறு வாய்க்கப் பெறாததால் இவனுடைய காதல் மனையாள் இக்குழந்தையை அன்புடன் ஏற்றுத் தன் மலட்டுத் தன்மையையும் போக்கிக் கொண்டாள். இக் குழந்தையை ஆவின்பால் போன்ற சத்துவகுண உணவையே 2. தே. பி. 130 (அமிர்தாசு வாதினி). 3. இவரைத் திருமாலினது பூரீவத்ச அம்சமாகக் கொள்வர் வைணவப் பெருமக்கள். பிறந்த நாள் கார்த்திகை மாதம் உரோகிணி நட்சத்திரம்.