பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாணர்குல விளக்கு $1. கொடுத்து வளர்த்து வந்தார்கள் அப் பாணர்த் தம்பதிகள். இங்ஙனம் வளர்க்கப் பெற்ற இக்குழந்தை, திருமால் அருளால் தோன்றியதால், வளர்ந்த பிறகு இயற்கையிலேயே உலகப் பற்றற்று எம்பெருமானுடைய திருவடித் தாமரை கட்கு தம் மனத்தை ஈடுபடுத்திக் கொண்டது. வளர்த்த பெற்றோர்கள் இத் தெய்வக் குழந்தைக்கு என்ன பெயர் இட்டனர் என்பதும் அறியக் கூடவில்லை. தாம் புகுந்த குலத்திற்கேற்ற யாழ்ப்பாடலில் தேர்ச்சி பெற்று சிறந்த பாடகராகத் திகழ்ந்தார். அரங்கன் புகழை யாழ் கொண்டு பாடுவதையே பொழுது போக்காகக் கொண்டிருந்ததால், அக்காலத்து மக்கள் பாணன் என்றே இவரை வழங்கி வந்தார்கள்; இயற்பெயர் இன்னதென்று கூட மறந்து விட்டார்கள். இந்தப் பாணருடைய உ ள் ம ன ம் அரங்கநகர் அப்பனையே அல்லும் பகலும் பாவனை செய்து கொண் டிருந்தது. படைப்பின் செயல்கள் எல்லாம் இவருக்கு அந்த அப்பனுடைய அழகுகளையும் ஆச்சரிய சக்திகளையும் வெளியிட்டன. படைப்பு முழுவதும் அரங்கநாதனின் மாயக் கூத்தென்று அவர் உள்மனம் உணரத் தொடங்கியது. கருஅரங்கத் துள்கிடந்து கைதொழுதேன்; கண்டேன் திருவரங்க மேயான்

  1. ಣಶ* என்று பொய்கையார் கூறுவதுபோல் திருவரங்கப் பெருமானே இவருக்கு தாரக, போஷக, போக்கியமாக அமைந்து விட்டான். எழு ஞாயிறு இருளை ஒட்டுவது போல், இருள் சக்திகளான அஞ்ஞானம், அதர்மம் முதலிய வற்றை ஈசுவர சக்தி ஒட்டிக் கொண்டிருப்பதாக உணர்ந்தார் இப்பரம ஞானி. வெண்ணெய் போல் உருகக்

4. முத. திருவந். 6.