பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ.சீனிவாசன்

101


கழிந்து விடுகிறது. மீதமுள்ள நாட்களில் பசி, பிணி, மூப்பு, துன்பங்கள் இல்லாமல் வாழ முடியவில்லை. எனவே எனக்கு இந்தப் பிறவி வேண்டாம் என்று ஆழ்வார் கூறுகிறார்.

தொண்டரடிப் பொடியாழ்வார் என்று அழைக்கப்படும் விப்ர நாராயணர் ஒரு நல்ல இன்பகரமான முழு வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர் தான். ஆயினும் பல சோதனைகளுக்குட்பட்டு சிறை வாசமும் இருந்திருக்கிறார். கடைசியில் அரங்கனின் அருளைப் பெறுகிறார். தொண்டரடிப் பொடியார் சிறந்த கல்வியறிவும் ஆத்மஞானமும் வாழ்க்கை அனுபவமும் நிறைந்தவர். மனித வாழ்க்கை என்பது பேதமையின்றி, பசி, பிணி, மூப்பு, துன்ப துயரங்களின்றி நூறாண்டு காலம் நல்ல மகிழ்ச்சிகரமாக இன்பகரமாக வாழ வேண்டும். பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். இறுதியில் முக்தியும் பெற்று திருமாலிடம் சேர வேண்டும் என்பதே ஆழ்வாரின் நோக்கமாகும். அதனையே இப்பாடல் குறிக்கிறது.

வேத நூல் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
நின்றதில் பதினை ஆண்டு
பேதை பாலகனதாகும்
பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கா மா நகருளானே

என்று மெய் மறந்து அரங்கனை நினைந்து அடிப்பொடியார் உள்ளம் உருகிப் பாடுகிறார்.