பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் -அ.சீனிவாசன்

107


போல அசைவும் ஆக்கமும்
வளரும் கடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே

(-திருவாய்மொழி 8-8)

என்றும் பாடுகிறார்.

ஆழ்வார்களைப் போலவே பாரதியும் உலகின் மீதும், உலக மக்கள் மீதும் மாளாத அன்பு கொண்டு, உலகம் முழுவதிலும், அன்பும் பொறையும் விளங்க வேண்டும், துன்பமும், மிடிமையும் நோவும் சாவும் நீங்கி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று பாடுகிறார்.

பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

விளங்குக, துன்பமும், மிடிமையும், நோவும்

சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயி ரெலாம்

இன்புற்று வாழ்க


என்பேன் என்று பாரதி பாடுகிறார்.


இலக்குமிக்குப் பிரார்த்தனை செய்து,


செல்வம் எட்டும் எய்தி - நின்னால்

செம்மையேறி வாழ்வேன்

இல்லையென்ற கொடுமை - உலகில்

இல்லையாக வைப்பேன்,

முல்லை போன்ற முறுவல் - காட்டி

மோக வாதை நீக்கி