பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5.நாடும் மக்களும் நலம் பெற

108


எல்லையற்ற சுவையே - எனை நீ
என்றும் வாழ வைப்பாய்

என்று பாரதி பாடுகிறார். இன்னும்

நாடு மணிச் செல்வமெல்லாம்

நன் கருள் வாய் திருவே!

பீடுடைய வான் பொருளே

பெருங்களியே திருவே!


என்றும்


நீறுபடக் கொடும்பாவம் பிணி பசி

யாவையும் - இங்கு

நீக்கி அடியரை நித்தமும் காத்திடும்

வேலவா


என்றும் பாடுகிறார்.


கட்டுகள் போக்கி விடுதலை தந்திடும்

கண்மணி போன்றவனை - எம்மைக்

காவல் புரிபவனை - தொல்லைக்

காட்டையழிப்பவனைத் - திசை

எட்டும் புகழ் வளர்ந்தோங்கிட வித்தைகள்

யாவும் பழகிடவே - புவி மிசை இன்பம்

பெருகிடவே - பெருந்திரள்

எய்திப் பணிந்திடுவோம் - வாரீர்


என்று பாடுகிறார்