பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும்- அ.சீனிவாசன்

111


திருமங்கை யாழ்வார் தனது பெரிய திருமொழியில் திருவழுந்நூர் ஆமருவியப்பனிடம் அடைக்கலம் அடைந்து பாடிய பாடல்கள் ஒன்றில் திருமால் பெருமானை நான்கு யுகங்களும் ஆனவன் என்று பாடுகிறார்.

தோயா வின் தயிர் நெய்ய முதுண்ணச்

சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற

தாயாலாப் புண்டிருந்தரு தேங்கும்

தாடாளா! தரை யோர்க்கும் விண்ணோர்க்கும்

சேயாய் கிரேத திரேத துவாபர,

கலியுகம் இவை நான்கு முனானாய்

ஆயா! நின்னடியன்றி மற்றறியேன்

அழுந்துார் மேல் திசை நின்றவம்மானே!


என்று திருமங்கைக் குலவேந்தன் பாடுகிறார்.

நம்மாழ்வார் ஒரு சிறந்த தத்துவ ஞானி. அனைவராலும் மதிக்கப் படும் போற்றப்படும் ஒளி விளக்கு. வைணவ தத்துவத்தின் ஒரு சிறப்பு என்ன வென்றால் அதன் மூலப் பொருளான திருமாலைத் தேடிப் பக்தன் செல்ல வேண்டியதில்லை. திருமாலே தனது பக்தனைத் தேடி வருவார் என்பது பிரபலம். பரமபரத்தைத் தேடி பக்தர்களும், அடியார்களும் செல்வது ஒரு பக்கம். மறுபக்கம் பரமபதத்தையே இந்த உலகிற்குக் கொண்டு வருவது ஒரு மகத்தான பணியாகும். அத்தகையதொரு மகத்தான பணியை நம்மாழ்வார் செய்யத் துணிகிறார். அவரே திருமாலின் பக்த கோடிகளுக்கு கோடிக்காணக்கான பக்த கோடிகளுக்கு மங்கள சாசனம் செய்கிறார். ஆண்டவனுக்கே பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் விட்டு சித்தன் வழியில் பக்த கோடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடுகிறார் நம்மாழ்வார் பெருமான் சடகோபனார்.