பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5.நாடும் மக்களும் நலம் பெற

118


ஆத்திசூடி என்பது பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு உரியது. அச்சம் தவிர் என்று தொடங்குகிறது. அத்தொகுதியில் நூற்றிப்பத்து ஆத்திசூடிப் பாடல்களை பாரதி பாடியுள்ளார். அதில் வையத்தலைமை கொள் என்பதும் ஒன்றாகும். நமது வருங்காலச் செல்வங்களுக்கு பாரதி காட்டு வழி வையத்தலைமை கொள் என்பதாகும்.

வையத்தலைமைக்கு நாம் உயர வேண்டும். சகல துறைகளிலும் பாரதம் வையத் தலைமையாக வளர வேண்டும், உயர வேண்டும். அத்துடன் பாரதி வையத் தலைமை எனக்கருள்வாய் என்று அன்னையை வேண்டுகிறார். இது பாரதியின் ஒரு அற்புதமான பாடலாகும்.

ஐயம் தீர்ந்து விடல் வேண்டும் - புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் - பல
பையச் சொல்லுவதிங்கென்னே - முன்னைப்
பார்த்தன் கண்ணன் இவர் நேரா - எனை
உய்யக் கொண்டருள வேண்டும் - அடி
உன்னைக் கோடி முறை தொழுதேன் - இனி
வையத்தலைமை எனக் கருள்வாய் அன்னை
வாழி, நின்னதருள் வாழி

என்பது பாரதியின் பாடலாகும். இந்த உலகத்தின் தலைமை பாரதத்திற்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது பாரதியின் வேண்டுதலாகும். அந்த உணர்வை நமது இளைஞர் சமுதாயம் பெற வேண்டும்.

ஆழ்வார்கள் வாழ்க, பாரதி வாழ்க.