பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6.கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள்


ஆழ்வார்கள் கண்ணனைப் பாடுகிறார்கள். கண்ணனின் பெருமைகளை கண்ணனுடைய லீலைகளைப் பாடுகிறார்கள். கண்ணனின் அவதாரமகிமையைப் பற்றி கண்ணனின் அரும் செயல்களைப் பற்றிப் பாடுகிறார்கள். கண்ணனைக் கடவுளாக குழந்தையாக நாயகனாகப் பாவித்துப் பாடுகிறார்கள். கண்ணனுடைய பிறப்பின் சிறப்புகளைப் போற்றிப் பாடுகிறார்கள். கண்ணனை உச்சி முதல் உள்ளங்கால் வரை வர்ணித்து அவனது அழகைப் புகழ்ந்து பாடுகிறார்கள். கண்ணனின் சாகசங்களைப் பாராட்டிப் பாடுகிறார்கள்.

ஆழ்வார்கள் திருமாலின் பல அவதாரங்களைப் பற்றியும் அவதாரச் சிறப்புகளைப் பற்றியும் பாடுகிறார்கள். ஆயினும் கண்ணனைப் பற்றியும் கண்ணன் பெருமைகளைப் பற்றியும் அதிகமாகப் பாடியுள்ளார்கள்.

பாரதியும் கண்ணனைப் பற்றிப் பெரிதும் பாடியுள்ளார். கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக கண்ணனைச் சேவகனாக, அரசனாக, சீடனாக, குருவாக, கண்ணம்மாவைக் குழந்தையாக, கண்ணனை விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, கண்ணம்மாவைக் காதலியாக, கண்ணனை ஆண்டானாக, கண்ணம்மாவைக் குலதெய்வமாக இவ்வாறெல்லாம் பாரதி பாடிப் பரவசப் பட்டுள்ளார். நம்மையெல்லாம் பரவசப் படுத்தியுள்ளார்.

பாரதியின் கண்ணன் பாட்டுத் தொகுதி ஒரு அற்புதமான பாடல் தொகுதியாகும். கருத்துச் செரிவு மிக்கதாகும். கவியாழம் கொண்டதாகும். பாரதியின் கண்ணன் பாட்டு சிறப்பான தத்துவ நிலை கொண்டதாகும். ஈடு இணையற்ற கவிதைத் தொகுப்பாகும்.

கண்ணனைப் பற்றி கண்ணன் பெருமைகளைப் பற்றி அநேகமாக எல்லா ஆழ்வார்களும் பாடியிருக்கிறார்கள். பாரதி தனது