பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

121


உண்ண அழைத்தும் அதே சமயத்தில் அவனுக்கு அம்மம் தர அஞ்சியும் அசோதை அவதிப் படுவதைப் போல் பாவித்து தான் அந்த அனுபவத்தைப் பெறுவதைப் போல பாவித்துப் பாடுகிறார். கண்ணனை ஆநிரை மேய்க்கக் காட்டிற்கு அனுப்பி விட்டு, கல்லும் முள்ளும் நிறைந்த காட்டிற்கு ஏன் அனுப்பினேன் என்று அசோதை வருந்துவதைப் போல பாவித்து ஆழ்வார் மிக அழகாகப் பாடுகிறார்.

கண்ணன் சில நாள் தாய் சொற்படி வீட்டில் தங்கி விட்டு மீண்டும் கன்றுகளை மேய்க்கக் காடு சென்று விட்டுத் திரும்பிய போது அவனுடைய அழகைக் கண்டு ஆயர்பாடிப் பெண்கள் காமுற்றுக் கூறிய அன்பு வார்த்தைகளை ஆழ்வார் கூறிப்பாடி அனுபவிக்கிறார்.

கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தது பற்றியும் விரிவாக ஆழ்வார் பாடுகிறார். கண்ணன் குழலோசையின் சிறப்புகளைப் பற்றி ஆழ்வார் பாடியுள்ளார். அந்த இசையின் இனிமையைக் கேட்டு ஆயர் பாடிப்பெண்கள், தேவமாதர்கள் மெய்மறந்து மயங்கி நின்றனர். ஆநிரைகளும், செடிகொடிகளும் மரங்களும் மகிழ்ந்தன. உலகையே அந்த இசை மயக்கியது. இத்தகையச் சிறப்புகளைப் பற்றியெல்லாம் ஆழ்வார் பெருமான் மனமுறுகிப் பாடுகிறார். கண்ணன் மீது மையல் கொண்டுள்ள மகனைப் பற்றித் தாய் இரக்கம் கொண்டு பாடுவதாக பாவித்து ஆழ்வார் மனமிரங்கிப் பாடுகிறார். துவாரகையில் அரியணையிலிருந்து ஆட்சி நடத்திக் கொண்டிருந்த கண்ணனைப் பாடுகிறார். கண்ணனுடைய திருநாமத்தை எந்நேரமும் உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்று ஆழ்வார் பாடுகிறார்.

மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றையும் முக்கரணங்கள் என்று கூறுகிறோம். நாம் ஒரு காரியத்தில் ஒரு செயலில் ஈடுபடும்