பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6.கண்ணனைப் பற்றி ஆழ்வாா்கள்

122


போது அதில் முக்கரணங்களையும் செலுத்தி ஈடுபட வேண்டும். அதையே திரி கரண சுத்தியாய் செயலில் ஈடுபடுகிறோம் என்று குறிப்பிடுகிறோம். அதை யோகம் என்று கூறலாம். இவ்வாறு திரிகரண சுத்தியாய் கண்ணனிடத்திலும், அவனுடைய சிறப்புகளிலும் நாம் ஈடுபட்டு நிற்க வேண்டும் என்று ஆழ்வார் தத்துவ விளக்கம் செய்கிறார்.

தேவகி வயிற்றில் பிறந்தவனே! உன்னையும் உன் சிறப்புகளையும் கண்டு கொண்டேன். நீயே என் நோய்களுக்கெல்லாம் மருந்தாவாய் என்று கண்ணனை நினைந்து ஆழ்வார் பாடுகிறார்.

பெரியாழ்வாரின் இந்தப் பாடல்கள் பக்திச்சுவை நிரம்பியவை. தனது மனம், வாக்கு, உடல், சிந்தனை, எண்ணங்கள் அனைத்தையும் முழுமையாக ஈடுபடுத்தி ஆழ்வார் மனமுருகிப் பாடியுள்ளார். இப்பாடல்கள் இனிமையான தமிழ் சுவை நிரம்பியதாக உள்ளன. அத்துடன் இயற்கை வளம், கால்நடைவளம், நிலத்திலிருந்தும் ஆவினங்கள் மூலமும் கிடைக்கும் செல்வங்கள், இல்வாழ்க்கை இன்பங்கள், குழந்தை இன்பங்கள், ஆயர் கூட்டங்களின் சிறப்பு மிக்க கலாச்சாரம், கண்ணன் குடி கொண்டுள்ள கோயில்கள் நிறைந்த ஊர்களின் வளம், அவைகளின் சிறப்புகள், அவற்றின் ஆற்று வளம், நீர் வளம், நில வளம், மலை வளம், கண்ணனின் கருணை, மக்களுக்கு விலங்குகளால், இயற்கைச் சீற்றங்களால், அரக்கர்களால், கொடுங்கோல் மன்னர்களால் ஏற்படும் இன்னல்கள், தொல்லைகள், அந்த இன்னல்களிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் மக்களைக் கண்ணன் காப்பாற்றிய கதைகள், பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், அவைகளால் ஏற்படும் நன்மைகள், பஞ்சபூதங்களின் பலவேறு சேர்க்கைகளினால் ஆக்கப்பட்டுள்ள பலவகை உயிரினங்கள், அவைகளை உலக நலனுக்காகப் பாதுகாத்தல், மனிதனுடைய