பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

127


கருப்பூரம் நாறுமோ?

கமலப் பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய் தான்

தித்தித்திருக்குமோ

மருப் பொசித்த மாத வன்றன்

வாய்ச் சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன்

சொல் ஆழி வெண் சங்கே!

என்று மிக அழகாக ஆண்டாள் பாடுகிறார்.

குல சேகராழ்வார்


குலசேகரப் பெருமான் இராமனையும் கண்ணனையும் பற்றிப் பாடுகிறார். ஆய்ச்சியர்கள் கண்ணன் மீது ஆசை கொண்டு அவன் வருகையை எதிர் பார்த்துக் கொண்டு யமுனைக் கரையில் காத்துக் கொண்டிருந்தனர். கண்ணன் வருவதாகச் சொல்லி விட்டு வரவில்லை. அதனால் வெறுப்படைந்து அவர்கள் பலவிதமாகக் கண்ணனைப் பற்றிப் பேசுவதாகக் கற்பித்து ஆழ்வார் மிக அருமையான பாடல்களைப் பாடுகிறார்.

ஆழ்வார் தன்னைத் தேவகியாகக் கற்பித்துக் கொண்டு, கண்ணா, உன்னைப் பெற்றெடுத்தேன். ஆனால் பாலூட்டி வளர்த்து உன் குழந்தை அழகைக் காணும் பாக்கியத்தைப் பெறவில்லை. உனது இளம் பருவத்தைக் காணும் இன்பத்தை நான் பெறவில்லை. அசோதையே அந்த இன்பத்தின் முடிவைக் கண்டாள் என்றெல்லாம் பாடி மகிழ்கிறார்.

திருமழிசையாழ்வார்


திருமழிசைப் பிரான் தனது திருச் சந்த விருத்தத்தில், ஆதியாகி