பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள்

130


நாராயண மந்திரத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து உணர்ச்சி வேகத்துடன் திருமால் பெருமையைப் பாடி மகிழ்க்கிறார். திவ்ய தேசங்கள் பலவற்றிற்கும் நேரில் சென்று அங்கு எழுந்தருளியுள்ள பெருமாளை வணங்கி வாழ்த்தி மங்கள சாசனம் செய்து மகிழ்கிறார். அவருடைய திவ்ய தேசப் பயணத்தை இமயத்திலிருந்து தொடங்குகிறார்.

திருப் பிரிதியில் எழுந்தருளியுள்ள பிரான் கண்ணபிரான் என்று மனதில் கொண்டு,

துடிகொள் நுண்ணிடைச் சுரி குழல் துளங்கெயிற்

றிளங்கொடி திறத்து - ஆயர்

இடிகொள் வெங்குரலின் விடை யடர்த்தவன்


என்று பாடி மகிழ்கிறார்.

இமய மலையில் திருமால் கோயில் கொண்ட முக்கியமான ஊர், பதரி காசிரமம் எனப் பெயர் பெற்றது. இக்கோயிலில் குடி கொண்டுள்ள பதரி நாதர், பத்ரி நாராயணன் என்று பெயர் பெற்றுள்ள பெருமாள் கோயிலாகும். பேய்ச்சியின் பெருமுலையைக் கடித்துக் கொன்ற கண்ணனின் உறைவிடம் பத்ரி காசிரமம் என்ற ஆழ்வார் பாடுகிறார்.

முற்ற மூத்துக் கோல் துணையா

முன்னடி நோக்கி வளைந்து

இற்றகால் போல் தள்ளி

மெள்ள விருந்தங்கி ளையாமுன்

பெற்றதாய் போல் வந்த

பேய்ச்சி பெருமுலை யூடு உயிரை