பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

131


வற்ற வாங்கி யுண்ட வாயான்

வதரி வணங்குதுமே!


என்று ஆழ்வார் பாடுகிறார். இன்னும்

பேயிடைக் கிருந்து வந்த மற்றவள் தன்

பெருமுலை சுவைத்திட, பெற்ற

தாயிடைக் கிருத்தல் அஞ்சுவன் என்று

தளர்ந்திட வளர்ந்த வெந்தலைவன்

சேய் முகட்டுச்சியண்டமும் சுமந்த

செம் பொன் செய் விலங்கலில் இலங்கு

வாய் முட்டிழிந்த கங்கையின் கரைமேல்

வதரியாச்சிரமத்துள்ளானே!


என்றும் பாடுகிறார்


திருச்சாளக்கிராமம் என்னும் திருப்பதியும் இமயமலைச் சாரலில் உள்ள திவ்ய தேசமாகும். இங்குள்ள பெருமானை,

விண்ணோர் பெருமான் நண்ணார் முன்

கடுத்தார்த் தெழுந்த பெருமழையைக்

கல்லொன் றேந்தியின நிரை காத்

தடுத்தான்


என்றும்,


தாயாய் வந்த பேய் உயிரும்
தயிரும் இழுதும் உடன் உண்ட
வாயான்
என்றும் கண்ணனாக பாவித்து ஆழ்வார் பாடுகிறார்.