பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 132

திருவேங்கட முடையானைக் கண்ணனாக பாவித்து,

நின்ற மாமருது இற்று வீழ நடந்த

நின்மலன் நேமியான் என்றும்,

கன்றிமாரி பொழிந்திடக் கடி

தானிரைக் கிடர் நீக்குவான்

சென்று குன்ற மெடுத்தவன் என்றும்

பார்த்தற்காய் அன்று பாரதம் கைசெய்

திட்டு வென்ற பரஞ்சுடர்

கோத்தங்காயர் தம் பாடியில் குரவை

பிணைந்த எம் கோவலன்

என்றும் பாடியுள்ளார்.

வீரராகவப் பெருமாள் குடிக் கொண்டுள்ள திருவள்ளுரைக் கண்ணன் இருக்கும் ஊர் என்றும், பாண்டவர் தூதன் கிடக்கும் ஊர் என்றும், ஏழு எருதுகளை அடக்கியவன் கிடக்கும் ஊர் என்றும், ஏழுலகும் உண்டவன் கிடக்கும் ஊர் என்றும் ஆழ்வார் பெருமான் பாடி மகிழ்கிறார்.

சென்னை திருவல்லி கேணி எழுத்தருளியுள்ள பார்த்த சாரதிப் பெருமானை,

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை

என்றும்,

பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர்முன் நின்றானை

என்றும்,