பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள்

134


அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்
        கிளையவன் அணியிழையைச் சென்று
எந்த மக்குரிமை செய் எனத் தரியாது
        எம் பெருமானருள் என்ன
சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம்
        பெண்டிரும் எய்தி நூலிழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத்
        திருவல்லிகேணி கண்டேனே!

என்றும் ஆழ்வார் மனமுருகப் பாடுகிறார்.

மாமல்லபுரம் ஒரு முக்கியமான திவ்ய தேசங்களில் ஒன்று. இவ்வூருக்குத் திருக்கடல் மல்லை என்று ஆழ்வார்கள் குறிப்பிடுவார்கள். அம்மாமல்லபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானைக் கண்ணனாகப் பாவித்து,

பேய்த்தாயை முலையுண்ட பிள்ளை தன்னைப்
        பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான் நோக்கின்
ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை
        அந்தணர் தம் அமுதத்தைக் குரவை முன்னே
கோத்தானை, குட மாடு கூத்தன் தன்னைக்
        கோகுலங்கள் தளராமல் குன்ற மேந்திக்
காத்தாணை, எம்மானைக் கண்டு கொண்டேன்,
        கடிபொழில் சூழ்க் கடல் மல்லைத்தல சயனத்தே!

என்று ஆழ்வார் பாடுகிறார்.