பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

135


திருக்கோவலூரில் எழுந்தருளியுள்ள பெருமானைத் திருமங்கையாழ்வார்,

உறியார்ந்த நறு வெண்ணெய் யொளியாக சென்றங்கு
         உண்டானைக் கண்டாய்ச் சியுரலோடார்க்க
தறியார்ந்த கருங்களிறே போல் நின்று
         தடங்கண்கள் பனி மல்கும் தன்மையானை

என்றும்,

இருங்கை மாகரி முனிந்து பரியைக் கீறி
இன விடை களேழடர்ந்து மருதம் சாய்த்து
வரும் சகட மிறவு தைத்து மல்லையட்டு
வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சானாதனை

என்றும்

பாரேறு பெரும் பாரம் தீரப்பண்டு
         பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை
         செருங் களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை

என்றும், அப்பிரானைக் கண்ணனாக பாவித்து மிகவும் அழகான தமிழ்ப் பாவினால் பாடி மகிழ்கிறார்.

திருவயிந்திர பரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானைக் கண்ணனாக பாவித்து,