பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1.தோற்றுவாய்


ஆழ்வார்கள் பாரதநாட்டின் பக்தி இயக்கத்தின் முன்னோடிகள். பக்தி இயக்கத்திற்குத் தமிழகம் பாரத நாட்டிற்கே முன்னோடியாக இருந்திருக்கிறது. தமிழகத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தி இயக்கத்தின் இருகண்களாக விளங்குகிறார்கள்.

ஆழ்வார்கள் பாடிய திவ்யப்பிரபந்தம் பாடல்கள், பக்திசுவை, தமிழ்ச்சுவை, மனிதாபிமானம், மனித நேயம், தியாக உணர்வு, அர்ப்பணிப்பு, அன்பு கருணை, அனைத்து மக்களையும், இயற்கை சக்திகளையும் மனித வாழ்கையையும் ஒன்றிணைத்த உலகவியல் தத்துவம், உலகம் முழுவதையும், உலகில் உள்ள பொருள்கள் அனைத்தையும் மகாவிஷ்ணுவின் வடிவில் கண்ட பரந்த ஆன்மீகத் தத்துவம், ஸ்ரீமன் நாராயணனை உலக வடிவில் கண்ட ஒரு உயர்வான நெடிது நோக்கு மக்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும் உத்வேகம், மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை அனுபவங்கள், முதலிய பல்சுவைகளும், ஆழ்ந்த கருத்துக்களும் தத்துவங்களும் நிறைந்தவை.

“சர்வம் விஷ்ணுமயம் ஜகத்” என்னும் பேருண்மையை ஆதாரமாகக் கொண்டு, அந்த உயர்ந்த தத்துவப்பொருளை மெய்ப் பொருளாகக் கொண்டு, திருமாலையும் திருமாலின் அவதாரப் பெருமைகளையும், அரிய செயல்களையும் ஆழ்வார்கள் தங்கள் பக்திப் பாடல்களில் இணைத்து இனிய தமிழில் இசையுடன் சேர்த்துப் பாடினார்கள்.

உலகம் முழுவதும் ஆண்டவனின் வடிவம் என்னும் மெய்க்கருத்தில், புல்பூண்டு, செடி கொடி, மரம் விலங்குகள் பறவைகள், பூச்சி, புழு முதலிய எண்ணற்ற உயிரினங்களும் மனிதனும், இப்பிரபஞ்சத்தில் உள்ள சகல பொருள்களும் விஷ்ணுவின் வடிவம் என்னும் மகத்தான தத்துவத்தை உள்ளடக்கி