பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 136

விரை கமழ்ந்த மென் கருங்குழல் காரணம்

வில்லிறுத்து அடை மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்

என்றும்,

வேல் கொள் கைத்தலத்தரசர் வெம் போரினில்

விஜயனுக் காய் மணித் தேர்க்

கோல் கொள் கைத்தலத் தெந்தை

எனவும் திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

திருச் சித்திரக் கூடத்தில் (சிதம்பரம்) எழுந்தருளியுள்ள கோவிந்த ராஜப் பெருமாளைக் கண்ணன் எனப் பாவித்து,

வாட மருதிடை போகி

மல்லரைக் கொன்றொக் கலித்திட்டு ஆடல் நல் மாவுடைத்தாயர்

ஆநிரைக் கன்றிடர் தீர்ப்பான் கூடிய மாமழை காத்த

கூத்தன் என வருகின்றான்

எனவும்,

பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட

பிள்ளை பரிசிது வென்றால் மாநில மாமகள் மாதர் கேள்வன் இவன்

என்றும்

பண்டிவன் வெண்ணெய் உண்டானென

ஆய்ச்சியர் கூடியிழிப்ப