பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாதியம்-அ. சீனிவாசன் 141

வெஞ்சினக்களிறும் வில்லொடு மல்லும்

வெகுண்டிருத் தடர்ந்தவன் தன்னை

கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக்

கருமுகில் திரு நிறத்தவனை

செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள்

செம்பொன்செய் கோயிலினுள்ளே

அஞ்சனக் குன்றம் நின்ற தொப்பானைக்

கண்டு கொண்டேன் அல்லல் தீர்ந்தேனே

என்று பாடுகிறார்.

திருநாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்றான திருத்தெற்றியம் பலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமானைப் பற்றி

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்

மற்றவர் தம் காதலி மார் குழையும் தந்தை

காற்றளையும் உடன் கழல வந்து தோன்றிக்

கதநாகம் காத்தளித்த கண்ண்ன் கண்டீர்

என்றும்

பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட பொல்லாதவன் பேய்ச்சி கொங்கை வாங்கி

பெற்றெடுத்த தாய் போல மடுப்ப ஆரும்

பேணா நஞ்சுண்டு கந்த பிள்ளை கண்டீர்

என்றும்,