பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 150

என்றும்,

கட்டேறு நீள் சோலைக் காண்டவ த்தைத் தீ மூட்டி விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை மட்டேறு கற்பகத்தை மாதர்க் காய் வண் துவரை

நட்டானை நாடி நறையூரில் கண்டேனே

மண்ணின் மீ பாரங் கெடுப்பான் மறமன்னர் பண்ணின் மேல் வந்த படையெல்லாம் பாரதத்து விண்ணின் மீதேற விஜயன் தேர் ஊர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே!

என்றெல்லாம் பாடுகிறார்.

திருவழுந்துார் பிரானைக் கண்ணன் வடிவில் கண்டதாக ஆழ்வார் மெய் மறந்து பாடுகிறார்.

என்றும்,

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழ மன்று பொன்றாமை, அதனுக்கருள் செய்த போரேற்றை அன்றாவின் நறு நெய்ய மர்தந்துண்ண அணியழுந்துார் நின்றானை அடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே!

கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள் நின்றானை வஞ்சனப் பேய் முனை யூடுயிர் வாய்

மடுத்துண்டானை