பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 153

திருமாலிருஞ் சோலை மலையில் வாழும் அழகர்

பெருமானை,

பார்த்தனுக் கன்றருளிப் பாரதத் தொடு தேர் முன் நின்று காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க

ԼՈTԼՈՃեյ) հՆ) Ճմ) ԼԼ]

தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்

சோலை நின்ற

மூர்த்தியைக் கை தொழ என்று பாடுகிறார்.

திருக்கோட்டியூரில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை, கன்று கொண்டு விளங்கனி யெறிந்து ஆநிரைக் கழிவென்று, மாமழை நின்று காத்து கந்தான் நில மாமகட் கினியான் குன்றின் முல்லையின் வாசமும் குளிர் மல்லிகை மணமும் அளைந்து இளம்

தென்றல் வந்துலவும் திருக்கோட்டி யூரானே!

என்று அழகாகப் பாடி ஆழ்வார் மகிழ்கிறார்.

திருமங்கை யாழ்வாரும் பெரியாழ்வாரைப் போல, தன்னை யசோதையாக பாவித்துக் கொண்டு, குழந்தை கண்ணனுக்குப் பாலூட்ட அவனை அழைப்பதாக மிக அருமையான பாடல்கள் சுவை மிக்க தமிழில் பாடியுள்ளார்.

தன் மகனாக வன் பேய்ச்சி

தான் முலை உண்ணக் கொடுக்க