பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 154

வன் மகனாயவள் ஆவி

வாங்கி முலையுண்ட நம்பி நன் மகன் ஆய் மகனோடு

நாநில மங்கை மணாளா! என் மகனே அம்ம முண்ணாய்

என்னம்மம் சேம முண்ணாயே

என்று ஆழ்வார் பாடுகிறார்.

மீண்டும் ஆழ்வார் தன்னை யசோதையாக பாவித்துக் கொண்டு கண்ணனைச் சப்பாணிப் பருவத்தில் கண்டு களித்துப் பாடுகிறார்.

பூங்கோதை யாய்ச்சி கடை வெண்ணெய் புக்குண்ண என்று தொடங்கி, நந்தன் மகனே என்றும், பேய்ச்சி பால் உண்டவனே என்றும், சகடம் உதைத்தவனே என்றும் கூறி சப்பாணி கொட்டுமாறு கண்ணனை ஆழ்வார் அழைக்கிறார்.

கண்ணபிரான் ஆயர் பாடியில் அடுத்தவர் வீடுகளுக்குள் எல்லாம் சென்று வெண்ணெயும், பாலும் தயிரும் நெய்யும் எடுத்து உண்டு களித்தான். அதனால் கோபமடைந்த ஆய்ச்சியர் கண்ணனைக் கயிற்றால் கட்டிப் போட்டார்கள். அக்காட்சியை வைத்து திருமால் எத்தனை வல்லமை மிக்கவர், உலகை உண்டவர், இரணியன் வயிற்றைக் கிழித்துக் கொன்றவர், அனைத்து உலகங்களையும் ஈரடியால் அளந்தவர், நெடுவான் அளவுக்கு நீண்டவர், ஆயிரம் மன்னர்களை (கொடுங்கோலர்களை) தனது மழுவாயுதத்தால் அழித்திட்டவர், அரக்கர்களை வென்றவர், இலங்கை மன்னரை வென்றவர், ஏழு மராமரங்களை தனது கணையால் துளைத்தவர், அத்தகைய சர்வ வல்லமை மிக்க சாகசக்காரரா ஆய்ச்சியர்களால் கட்டுண்டார் என்று கேட்கிறார் ஆழ்வார்.