பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 155

கண்ணன் செய்யும் தீம்புகளையும், வம்புகளையும் பற்றி, ஆய்ச்சியர்கள் அசோதையிடம் புகார் செய்கிறார்கள். பாலை எல்லாம் குடித்து விட்டான். வெண்ணையையெல்லாம் எடுத்து விழுங்கி விட்டான். என் மகளிடம் வம்பு செய்கிறான். இந்திரனுக்கு விழாக் காலத்தில் படைக்கவிருந்த அனைத்தையும் உண்டு விட்டான் என்றெல்லாம் முறையிடுகிறார்கள், என்றும், அதற்கு அசோதை நான் என்ன செய்வேன், அவனைக் கண்டால் எனக்கு அச்சமாக உள்ளது. அவன் பேய்ச்சி முலை உண்டவன், சகடத்தைச் சாடியவன், கஞ்சனைக் கொன்றவன் என்றெல்லாம் அசோதை கூறியதாகக் கற்பித்து ஆழ்வார் அழகு தமிழில் பாடுகிறார். இப்பாடல்களைப் பாடியோருக்கு இடரில்லை, துன்பமில்லை, இன்பமே எய்துவர் என்று பாடி மகிழ்கிறார்.

தன் மகள், கண்ணன் மீது அளவில்லாத காதல் கொண்டுள்ளாள், அவளுடன் வந்து கலக்காமல் கண்ணன் வாளாவிருக்கலாமா? காலம் கடத்தலாமா? என்று கற்பித்துக் கண்ணனை வேண்டும் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பழமொழியுடன் முடிவதாக அமைந்திருக்கிறது.

திருமங்கையாழ்வார் பாடியுள்ள இப்பாடல்கள் ஒரு சிறந்த இலக்கியமாகப் படித்து இன்புறத் தக்கதாக உள்ளது.

பிள்ளை தன் கையில் கிண்ணமே யொக்கப்

பேசுவ தெந்தை பிரானே என்றும்,

முன்றி லெழுந்த முருங்கையில் தேனா

முன் கை வளை கவர்ந்தாயே என்றும்

அங் கையில் வட்டாம் இவள் எனக்

கருதுகிறாயே எனவும்