பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 162

பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய்கீண்டானும்

மருதிடை போய் மண்ணளந்தமால்”

என்று பாடுகிறார்.

"விரலோடுவாய் தோய்ந்த வெண்ணெய்

கண்டு ஆய்ச்சி

உரலோடுறப் பிணித்த ஞான்று-குரலோவா

தேங்கி நினைந்த யலார் காண இருந்திலையே?

ஓங்கோத வண்ணா! உரை!”

எனவும் பாடுகிறார்.

"வரைகுடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்

நிரைவிடை யேழ் செற்றவாறென்னே-உரவுடைய, நீராழியுள் கிடந்து நேரா நிசாசரர் மேல், பேராழி கொண்ட பிரான்."

என்று ஆநிரை காத்த அருஞ்செயல்களையும்,

"வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய் தேனாகிப்பாலாம் திருமாலே - ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணைய் உமிழ்ந்த வயிறு”

என்று வெண்ணெய் திருடி உண்ட லீலைகளையும் வியந்து ஆழ்வார்

அழகாகப் பாடுகிறார்.

பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் மாமல்லபுரம் என்னும் திருக்கடல் மல்லையில் மாதவிப்பந்தலில் உள்ள குருக்கத்தி மலரில் தோன்றியவர் என்பது