பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 163

வைணவ வரலாறு. இவ்வாழ்வாரும் பிறப்பால் சாதி அறியப்படாதவர். ஞானத்தால் வளர்ந்தவர் தமிழ் அறிந்த தனி ஞானி.

"அன்பேதகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தையிடுதிரியா - நன்புருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத்தமிழ் புரிந்த நான்”

என்று தனது திருவந்ததாதியைத் தொடங்குகிறார். பூதத்தாழ்வரின் அந்தாதி இரண்டாம் திருவந்தாதி என்று திவ்யப் பிரபந்தத்தில் அழைக்கப்படுகிறது.

பொய்கையாழ்வார் வையத்தைத் தகளியாகவும், கடலை

நெய்யாகவும், கதிரோனை விளக்காகவும் வைத்துத் திருமாலைப் பாடி மகிழ்ந்து உலகத்து இடர்களெல்லாம் நீங்க வேண்டும் என்று தனது பாடல்களைத் தொடங்கினார். ஆனால் பூதத்தாழ்வார் ஞானக் கடலாக நின்று அன்பே தகளியாகவும், ஆர்வப் பெருக்கத்தையே நெய்யாகவும் வைத்து இன்பம் உருகும் சிந்தனைகளையே திரியாகவும் கொண்டு ஞானசுடர், விளக்கேற்றி, நாராயணனை, அறிவுச் செல்வமான தமிழால் பாடுவதாகக் கூறுகிறார். இரு ஆழ்வார்களின் தொடக்கமும் மிகவும் அருமையான தொடக்கமாகும். பொய்கையாழ்வாரும் திருமாலைப் பாடிய பல பாடல்களைலும் கண்ணன் பெருமைகளைப் பாடுகிறார்.

"உகந்துன்னை வாங்கி ஒளி நிறங்கொள் கொங்கை

அகம் குளிரவுண்ணென்றான் ஆவி-உகந்து

முலையுண்பாய் போல முனிந்துண்டாய்” என்றும்,

“அன்றது கண்டஞ்சாத ஆய்ச்சி உனக்கிரங்கி

நின்று முலைதந்த இந்நீர்மைக்கு - அன்று